89ல் சிறுபட்ஜெட் படமாக ரிலீஸாகி தமிழ் சினிமா அத்தனை ரெகார்டுகளையும் நலம் விசாரித்த படம் இளையராஜா, ராமராஜன், கங்கை அமரன் கூட்டணியின் ‘கரகாட்டக்காரன்’. தற்போது வரை அப்படத்தின் பாடல்களும், கவுண்டமணி செந்தில் காமெடியும் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில் அதன்
இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவிருப்பதாக இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன்.
இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவிருப்பதாக இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன்.
இந்த படத்தில் இருக்கும் நகைச்சுவை காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இது குறித்து கங்கை அமரன் கூறுகையில் “2-ம் பாகம் எடுப்பது குறித்து ராமராஜன் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.தற்போதைய நடிகர்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என அவர் கூறினார்.
Comments
Post a Comment