பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரித்துள்ள படம் சிறகு. இப்படத்தை கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி உள்ளார். மெட்ராஸ், கபாலி, வடசென்னை, சண்டைக்கோழி-2, ஆகிய படங்கள் மூலமாக நன்கு பரிச்சயமான நாயகன் ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடித்துள்ளார். அக்ஷிதா நாயகியாக நடித்துள்ளார்.
துணை கதாபாத்திரத்தில் நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா, காளிவெங்கட் நடித்துள்ளனர். படத்திற்கு அரோல் கொரேலி இசை அமைத்துள்ளார். பியார் பிரேமா காதல் படம் மூலம் ஒளிப்பதிவில் தனித்தன்மை காட்டிய ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தொகுப்பை அருண்குமார் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின், “தனிமைச் சிறகினிலே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். மேலும் படத்தின் டீசரை இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
Comments
Post a Comment