கௌதம் கார்த்திக்கு நடிகர் சிம்பு சிறப்பு பரிசு!

நடிகர் சிம்பு 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்குப் பிறகு, ஹன்சிகா நடித்துவரும் 'மஹா' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 
அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை 23ம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கிடையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.சிம்பு வில்லனாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கௌதம் கார்த்திக்கு நடிகர் சிம்பு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஒரு அழகான கூலிங் கிளாசை கௌதம் கார்த்திக்கு சிம்பு கொடுத்திருக்கிறார்,கன்னடத்தில் உருவான 'மப்டி' படத்தின் இயக்குனர் நர்த்தன் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். 

Comments