ராணாவுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

 உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஒரு தென்னிந்திய நடிகை அமெரிக்க தொலைக்காட்சியில் நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மும்பையில் பாகுபலி நடிகர் ராணா மற்றும் இயக்குனர் பிரகாஷ் ஆகியோர்களை ஸ்ருதிஹாசன் சந்தித்து அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பில் இருந்து பிரகாஷ் இயக்கும் படத்தில் ராணாவுடன் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே சமீபத்தில் ஜெகந்நாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments