சமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி “ நீர்முள்ளி!

ஹோலி ரெடிமர்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஹிட்லர்.J.K. கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, நாயகனாக நடிக்கும் படத்திற்கு “ நீர்முள்ளி “ என்று பெயரிட்டுள்ளார்.
நாயகியாக சுமா பூஜாரி நடிக்கிறார். மற்றும் ரேகா, மெய்வாரா, பொன்னம்பலம், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி,நளினி, வீரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் அகத்தியன் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – பால்பாண்டி
பாடல்கள், நடனம், இசை – நிர்மல்
கலை – மணிவர்மா
தயாரிப்பு மேற்பார்வை – N.A. நாதன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – ஹிட்லர்.J.K.
படம் பற்றி இயக்குனர் நடிகர் முசோலினி ஹிட்லர் கூறியதாவது…
இந்த படம் கிரைம் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படம்.
இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்தில் பெண்கள் தங்களை சார்ந்த ஆண் உறவுகளை எப்படி கையாள்கிறார்கள், அதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. காலத்திற்கேற்ப பெண்களின் எண்ண ஓட்டமும் மாறுபடுவதால் ஏற்படும் சீர்கேடு பற்றி கதை இருக்கும். பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வை இந்த படம் கொடுக்கும். இது பெண்களுக்கான உணர்வுபூர்வமான சமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌனபுரட்சியை ஏற்படுத்தும்.
நீர்முள்ளி என்பது வயல் வெளிகளில் காணப்படும் ஒரு முற்ச்செடி அதை அகற்றுவது என்பது சிரம்மம் முள் குத்திவிடும். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் அதிகம். அது போலதான் பெண்களும் சிறு தவறுகளை உணர்ந்துகொண்டு நடந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் அதனால் தான் இந்த படத்திற்கு நீர்முள்ளி என்று பெயரிட்டுள்ளேன். என்கிறார் இயக்குனர் ஹிட்லர்.J.K.

Comments