தமிழ் சினிமா ரசிகர் நெஞ்சங்களில் நீங்க இடம் பிடித்தவர் நக்கல் நாயகன் கவுண்டமணி, காமெடி உலகின் கிங்காக பாவிக்கப்பட்ட கவுண்டமணி சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் தனது காமெடியால் கலக்க உள்ளார்.கமெடியனாக இருந்து நாயகனாக உருமாறியுள்ள சந்தானம் தற்போது கண்ணன் என்பவர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில் கவுண்டமணி ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இதன் மூலம் மீண்டும் நகைச்சுவை மன்னனாக சினிமா ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வர உள்ளார் கவுண்டமணி.
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தனக்கென்று தனி பாதையை உருவாக்கியவர்களில் கவுண்டமணி முக்கியமானவர். சக காமெடி நடிகர்களிலிருந்து கதாநாயகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளுவது கவுண்டமணியின் பாணி. அவருக்கு பின்னால் அதே பாணியை கையில் எடுத்தவர் சந்தானம்.
வடிவேலு திரைத்துறையில் இருந்து விலகிய காலகட்டத்தில் சந்தானத்தின் இந்த பாணி வரவேற்பு பெற்றது. காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்துவரும் நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.பூமராங் படத்தை இயக்கிய கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக நடிக்கும் போதும் சந்தானம் அனைவரையும் கலாய்த்து காமெடி செய்துவரும் நிலையில் கவுண்டமணி படத்தில் இணைந்ததால் யார் யாரை கலாய்ப்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Comments
Post a Comment