பலத்த பாதுகாப்புடன் நடிகர் சங்க தேர்தல் தொடங்கியது!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது.நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது.நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க இதுவரை 198 நடிகர் நடிகைகள் வாக்களித்துள்ளனர்.நடிகர்கள் வாக்களிக்க வருகை தந்த வண்ணம் உள்ளனர் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க நடிகர்கள் ராம்கி, கே.ஆர்.விஜயா, வடிவுக்கரசி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

Comments