நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் என்று குஷ்பு கூறியுள்ளார்.நடிகர் சங்க தேர்தலையொட்டி, வாக்களிக்க வந்த குஷ்பு அளித்த பேட்டியில், நடிகர் சங்க தேர்தல் நடக்குமா என்று கேள்வி குறியாக இருந்தது. ஆனால், இன்று வெற்றிகரமாக நடந்து வருகிறது.
நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும். நிறைய பேருக்கு தேர்தல் எங்கு நடக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த முறை எங்கு நடந்ததோ அங்குதான் தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குப்பதிவு நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றார்.
Comments
Post a Comment