எனக்குத்தாம்பா அமைதிக்கான நோபல் பரிசு! கலகல பாண்டியராஜன்!

சென்னை: சன் டிவியின் லொள்ளுபா நிகழ்ச்சியில் பாண்டியராஜன் கலகலன்னு நகைச்சுவையாக பேசினார்.அப்படி பேசும் போது, சினிமாக்காரங்களுக்கு யாரும் பொண்ணு தர மாட்டாங்கன்னு சொல்லி, தான் ஒரு பெண்ணை பார்த்து பிடிச்சு போனதும் பெண் கேட்டு கல்யாணம் செய்து கொண்ட தகவலையும் கூறினார்.அப்போதுதான் சினிமாக்காரங்கக்ளுக்கு பொண்ணு தரமாட்டாங்க. இப்போ பொண்ணுங்க தேடிப்போயி சினிமாக்காரங்களைத்தான் லவ் பண்றாங்க... அப்புறம் என்ன..கல்யாணம்தான். காலம் மாறிப் போச்சு..
கிடைச்சுது சிக்னல் ஒரு வீட்டில் ஷூட்டிங் .எடுத்துக்கிட்டு இருந்தோம்... அந்த வீட்டு பொண்ணுகிட்ட இருந்து எனக்கு நல்ல சிக்னல்தான் கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு. அதனால, பொண்ணு கேட்டுடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
அப்பா பொண்ணு சினிமாக்காரனுக்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்றதா சொல்றாங்க..இது உண்மையான்னு பொண்ணோட அப்பா கேட்டார். நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் சார்னு சொன்னேன்.
பொண்ணு யாரு அப்படியா.. அப்போ பொண்ணு யாருன்னு கேட்டார்...உங்க பொண்ணுதான் சார்னு சொல்லிட்டேன்.அவர் யோசிச்சார்..உடனே பதில் சொல்ல வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன். ரெண்டு நாள் கழிச்சு ஆபீசுக்கு மாமனார் தேடி வந்து பொண்ணு தரேன்னு சொன்னார்.
மூணு மருமகள்கள் இப்போ மூணு பசங்க...மூணு மருமகள்கள், பேரக் குழந்தைகள்னு கூட்டு குடும்பம்... அமைதிக்கான நோபல் பரிசு தரனும்னா எனக்குத்தான் தரணும்னு சொன்னார்.
வாழும் மனிதர்கள் நம்மை சுத்தி வாழும் மனிதர்களைத்தான் நாம் எடுக்கப் போற படத்தின் கதாபாத்திரங்களா எடுத்துக்கணும். என் அப்பா சொல்லுவார் நான் செத்த பிறகு நீ எல்லாம் என்ன பண்ண போறியோன்னு... திரும்பி வந்து பார்த்தால் தன் படத்துக்கு தானே ஊது வத்தி ஏத்தி வைப்பார்.
அதுதான் கன்னி ராசி படத்துல கவுண்டமணி சார் தன் படத்துக்கு தானே மலை போட்டு வத்தி ஏத்தி வைப்பது போல எடுத்தது என்றார்.

Comments