தமிழ் சினிமாவில், இன்னும் கொஞ்ச காலத்திற்கு, பேய் மற்றும் 'த்ரில்லர்
சீசன்' ஓயாது போலிருக்கிறது. காஞ்சனா 3, கேம் ஓவர், கொலையுதிர்காலம்
வரிசையில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும், ஆயிரம் ஜென்மங்கள் படம் தயாராகி
வருகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சமீபத்தில் வெளி வந்த, சர்வம் தாளமயம்,
வாட்ச்மேன் போன்ற படங்கள், வரிசையாக தோல்வியடைந்தன.அதனால் அவரும்,
டார்லிங் வெற்றியை மனதில் வைத்து, பேய் படத்திற்கு திரும்பி உள்ளார்.
ஈஷாரெப்பா, சாக் ஷி அகர்வால், நிகிஷா படேல் என, படத்தில் மூன்று நாயகியர்
நடிக்க, காமெடிக்கு சதீஷ், கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன், வையாபுரி,
ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் உள்ளனர். சென்னையில் வேலை தேடும்,
ஜி.வி.பிரகாஷுக்கு, வெளிநாட்டில் உள்ள நபருக்கு பிடித்த பேயை விரட்டும் பணி
கிடைக்கிறது.
பேயை விரட்டினாரா, இல்லையா என்பதே படத்தின் கதை.
Comments
Post a Comment