நடிகர் சங்க தேர்தல், இன்று காலை 7 மணி முதல் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இன்று இரவு முதல், 100 நாட்கள் வரை, அனைவரையும் பரபரப்பாக பேச வைக்க கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.சற்றும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல், ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை, பிரபலங்கள் முதல், ரசிகர்கள் என அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். எனினும் பிக்பாஸ் சீசன் 2 , நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
எனினும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக யாருக்கெல்லாம் ஆர்மி ஆரமிக்கலாம் என இப்போதே தயாராகி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த சில ப்ரோமோக்கள் வெளியாகி கொண்டிருக்கிறது, அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், "சிலரை பார்க்கும் போது, நமக்கு தெரிந்தவர்களை பார்ப்பது போல் உள்ளது, சிலரை பார்க்கும் போது, நம்மையே பார்ப்பது போல் உள்ளது. என பேசும் படி ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வீடியோ இதோ:
சில பேர பாக்கும்போது நம்மளயே பாக்குற மாதிரி இருக்கும்..! 😎— Vijay Television (@vijaytelevision) June 23, 2019
இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது பிக்பாஸ்.. #BiggBossTamil #TheGrandOpening #BiggBossTamil3 #BiggBoss3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/8YOVNQArp0
Comments
Post a Comment