லாஸ்லியாவின் ரசிகரான பிரபல நடிகர்!

கடந்த வாரம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நாளுக்கு நால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மூன்றாவது முறையாக இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் நடிகர் கமல் ஹாசன். நடிகர்கள், பாடகர்கள், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர், செய்தி வாசிப்பாளர்கள், மாடல்கள் என வெரைட்டியான ஆட்கள் போட்டியாளர்களாக இருப்பதால் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூடுவதாக பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியின் முதல் நாளில் இருந்தே பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார் இலங்கையின் செய்தி வாசிப்பாளரும், மாடலுமான லாஸ்லியா. அதனால் லாஸ்லியா ஆர்மியும் ஆரம்பிக்கப்பட்டு, அதில் இணைபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். அவர் அப்படி என்ன தான் செய்தார் என்றால், எதுவும் செய்யாமல் இயல்பாக இருக்கிறாரே அது தான் எங்களுக்குப் பிடித்திருக்கிறது என்கிறார்கள் லாஸ்லியா விசிறிகள்.
 
இந்நிலையில் அவர், புதன் கிழமை ஒளிபரப்பான எபிசோட்டில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கண்ணம்மா’ என்ற பாடலை பாடினார். அதனை சில ரசிகர்கள் அந்தப் படத்தின் நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு டேக் செய்திருந்தனர்.
 
அதைப் பார்த்த ஹரீஷ், “இதயங்களை வென்றிருக்கிறார் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் கண்ணம்மா பாடலை கேட்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என ட்வீட்டியிருந்தார்.இதன் மூலம் ஹரீஷ் கல்யாணும் லாஸ்லியாவின் விசிறியாகியிருப்பது தெரிகிறது. மேலும் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியில் இவரும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Comments