திருமணத்துக்கு பின், முதல் முறையாக, கணவன் - மனைவியாக நடிப்பது மகிழ்ச்சி: தீபிகா!

 கடந்த, 1983ல், இந்திய கிரிக்கெட் அணிக்கு, உலக கோப்பையை வென்று கொடுத்த, கபில்தேவின் வாழ்க்கை வரலாறு, ஹிந்தியில், திரைப்படமாக தயாராகிறது.இந்த படத்துக்கு, 83 என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், கபில்தேவாக, நடிப்பவர், ரன்வீர் சிங். கபில் தேவின் மனைவி, ரோமியாக நடிப்பவர் யார் தெரியுமா; சாட்சாத், ரன்வீர் சிங்கின் மனைவியான, தீபிகா படுகோனே தான்.
 
இது குறித்து தீபிகா கூறுகையில், ''திருமணத்துக்கு முன் வெளியான சில படங்களில், நாங்கள் இருவரும், காதலர்களாக நடித்துள்ளோம். ஆனால், திருமணத்துக்கு பின், முதல் முறையாக, கணவன் - மனைவியாகவே இப்போது நடிப்பது, மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது, கூடுதல் சந்தோஷமாக உள்ளது,'' என்கிறார். இந்த படத்தில், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தாக, நம்ம ஊர், ஜீவா நடிக்கிறார் என்பது, கூடுதல் செய்தி.

Comments