வைரலாகும் நடிகர் அக்ஷய் குமாரின் ஸ்டண்ட் புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் “சூர்யவன்ஷி”.இந்த திரைப்படத்தை இயக்கி கொண்டிருப்பவர் பாலிவுட்டின் வெற்றிகரமான இயக்குனர் ரோஹித் ஷெட்டி.

சூர்யவன்ஷி” திரைப்படத்தின் படபிடிப்பு தீவிரமாக சென்றுகொண்டு இருக்கும் நிலையில்  நடிகர் அக்ஷய் குமார்,அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படத்தில் அக்ஷய் குமார் தரையிலிருந்து சிறுது உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிஹாப்டரிலிருந்து தொங்கிகொண்டிருப்பது போலவும்,அவருக்கு முன்பு இயக்குனர் ரோஹித் ஷெட்டி பைக்கில் செல்வது போலவும் இடம் பெற்றிருக்கிறது.
 
மேலும் அந்த ட்விட்டர் பதிவில் அவர் “இதை தயவுசெய்து யாரும் முயற்சி செய்யாதீர்கள்” என்று ரசிகர்களிடம் வேண்டிக்கேட்டுக்கொண்டுள்ளார்அக்ஷய் குமாரின் இந்த துணிச்சலான ஸ்டண்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

Comments