சில விவகாரங்களில் பொறுப்புணர்வு இல்லை..! கேள்வி கேட்டால் பதிலுமில்லை பாண்டவர் அணி மீது ..! நடிகர் குற்றச்சாட்டு!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது.நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் நடிகர் சங்கம் என்பது ஒரு குடும்பம், தேர்தல் நேரத்தில் மட்டுமே இரு பிரிவு, தேர்தலுக்கு பிறகு ஒரு அணியாக செயல்படுவோம் -என்று நடிகர் ஷியாம் தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் பாண்டவர் அணியினர் சில விவகாரங்களில் பொறுப்புணர்வு இன்றி உள்ளனர் அது குறித்து கேள்வி கேட்டால் சரியான பதிலளிக்க மறுக்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் நடந்து வரும் நிலையில் நடிகர் மைக் மோகன் வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியதால் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.கள்ள வாக்குப் பதிவு அங்கு சலசப்பை ஏற்படுத்தியது
Comments
Post a Comment