விருது விழாவில் கவர்ச்சி விருந்து கொடுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கும் முனைப்பில் இருக்கிறார்.  கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான 'தடக்'  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து,  கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
 
அந்த வகையில், இவருக்கு பல இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்தாலும்,  படங்கள் தேர்வு செய்யும் விஷயத்தில் மிகவும் நிதானமாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று  நடந்த

Grazia Millennial Awards 2019 விருது விழாவில் ஜான்வி கபூருக்கு 'ரைசிங் ஸ்டார் ஆப் தி இயர்' என்கிற விருது வழங்கப்பட்டது.  இந்த விழாவிற்கு பிங்க் கலர், பேண்ட் - சூட்டை கூட கவர்ச்சியாக அணிந்திருந்தார். இது விருது விழாவிற்கு வந்தவர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்தது என்றே கூறலாம்.

Comments