நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம்?

நடிகை ரெஜினா கசான்ட்ராவுக்கு கடந்த 13ம் தேதி ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கண்டநாள் முதல் படம் மூலம் நடிகையானவர் சென்னை பெண்ணான ரெஜினா கசான்ட்ரா. அவர் தமிழ், தெலுங்கு, கன்னட
ம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கு திரையுலகில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அவர் ஏக் லட்கி கோ தேக்கா தோ ஏசா லகா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அதுவும் அந்த படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் ரெஜினா. 28 வயதாகும் ரெஜினாவுக்கு கடந்த 13ம் தேதி ரகசியமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒப்புக் கொண்ட படங்களில் நடித்து முடித்து விட்டு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார் ரெஜினா என்று கூறப்படுகிறது. ரெஜினாவின் கெரியர் எதிர்பார்த்த அளவுக்கு செல்லாததால் அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்துள்ளார் என்று பேச்சு கிளம்பியுள்ளது.
 
ஆனால் நிச்சயதார்த்தம், திருமணம் பற்றி ரெஜினா கசான்ட்ரா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ரெஜினாவும் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. நாங்கள் காதலர்கள் எல்லாம் இல்லை, நல்ல நண்பர்கள் மட்டுமே என்று இருவரும் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் பேச்சை யாரும் நம்பத் தயாராக இல்லை.

Comments