திரைதுறைக்கு வந்த சிறிது காலத்திலேயே மிக பிரபலமான கீர்த்தி சுரேஷ் குறித்த புதிய தகவல் தெரியுமா!

திரைதுறைக்கு வந்த சிறிது காலத்திலேயே மிக பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது அக்கினேனி நாகார்ஜுனா நடிக்கும் ‘மன்மதுடு 2’ படத்தில் முக்கிய வேடத்தில்  நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து   நரேந்திர நாத் இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்றில் கீர்த்தி நடிக்க உள்ளார். இந்த படத்தை ஈஸ்ட் கோஸ்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
 
சமீபத்தில் இந்த படம் குறித்த தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் மஹேத் எஸ் கொனேரு, அந்த பதிவில் ‘45-50 ஆர்ட்டிஸ்ட், மற்றும் 1000 கிலோ தொழில்நுட்ப சாதனங்களுடன் ஐரோப்பா செல்வது கடினமான ஒன்று தான். ஆனால், தயாரிப்புக் குழுவிற்கு இது ஒரு நல்ல  அனுபவமாக இருக்கும் என கருத்திட்டுள்ளார். இதன் மூலம் கீர்த்தி சுரேஷின் 20வது  படமான இந்த திரைப்படத்தின் பட‌ப்பிடிப்பு ஐரோப்பாவில் தொடங்க உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

Comments