பெங்களூரு, ஜூன் 10: பிரபல கன்னட நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 81.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் என்ற பன்முகத் திறமை கொண்டவர்.சமீபத்தில் கன்னட மொழிக்கான ஞானபீட விருதையும் இவர் பெற்றார்.கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வந்தார்.
அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன.தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் இன்று காலையில் காலமானார்.
Comments
Post a Comment