இடைவேளை இல்லாமல் படமா? தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு!

'மாயா' படத்தை தொடர்ந்து அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள படம் 'இரவாக்காலம்'. அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் மாதக்கணக்கில் முடங்கிக்கிடக்கிறது. எனவே டாப்ஸியை கதையின் நாயகியாக நடிக்க வைத்து 'கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் டாப்ஸி 'ஸ்வப்னா' என்ற கேரக்

'கேம் ஓவர்' படத்தின் கதையை அஸ்வின் சரவணனுடன் டாக்டர் காவியா ராம்குமார் இணைந்து எழுதியுள்ளார். 'மாயா' படத்திற்கு இசை அமைத்த ரான் எதன் யோஹானே இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். இரவாக்காலம் படத்துக்கு முன்னதாக கேம் ஓவர் படம் வெளியாக இருக்கிறது.

மாறுபட்ட ஒரு ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் பாடல்கள் இல்லை. இப்படத்தின் ரன்னிங்டைம் 100 நிமிடங்கள்தான். எனவே இடைவேளை இல்லாமல் படத்தை திரையிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதற்கு தியேட்டர் அதிபர்கள் உடன்படவில்லை.

பல தியேட்டர்கள் கேண்டீன் வியாபாரத்தையே பெரிதும் நம்பி இருப்பதால் இடைவேளை இல்லாமல் கேம் ஓவர் படத்தை திரையிட முன்வரவில்லை. எனவே இந்த முயற்சி தமிழ் சினிமாவுக்கு செட் ஆகாது என்பதால் அந்த யோசனையை விட்டுவிட்டார்கள்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடியாக இப்படம் உருவானதாக தயாரிப்பு தரப்பிலிருந்து சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் மட்டும் ஹிந்தியில் மட்டும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது என்றும் சொல்கின்றனர்.
டரில் நடித்துள்ளார். அவரது கேரக்டரை மையப்படுத்தியே 'கேம் ஓவர்' படத்தின் முழு கதையும் நகருமாம்.

Comments