இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்ததினால் பதில் மலேஷியா..மாநாடு அப்டேட்ஸ்!

சென்னை 600028 பார்ட் 2 படத்தை அடுத்து சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படம் 'மாநாடு'. 'வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகின்றன. ஆனால் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. எனவே மாநாடு படம் ட்ராப்பாகிவிட்டதாக தகவல் பரவியது.
 
இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 25-ஆம் தேதி மலேசியாவில் துவங்க இருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பை முதலில் இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். லொகேஷன் பார்க்க கிளம்பிய நேரத்தில்தான் இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்தது.
அதனால் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தும் எண்ணத்தை கைவிட்டனர். அங்கே எடுக்க திட்டமிட்ட காட்சிகளைத்தான் தற்போது மலேஷியாவில் படமாக்க உள்ளனர். இந்த படத்திற்கு இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதால், அன்றைக்கு வாக்குப்பதிவில் கலந்து கொண்டு வாக்களித்துவிட்டு அன்றைய தினமே மலேஷியா புறப்படுகிறார் சிம்பு. மலேஷியாவில் 25-ஆம் தேதி தொடங்கும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு 4 நாட்கள் மகா படத்தின் படப்பிடிப்பும் மலேசியாவில் நடக்கிறது.

Comments