அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட் மிஸ்!

லீ பிக்சர்ஸ் சார்பில் உருவாகி வரும் படம் “அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்மிஸ்” இந்த படத்தை ஆர் விக்னேஷ் இயக்குகிறார். இவர் பசுபதி நடிப்பில் வெளியான டிஎன் 07 4777 என்கிற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் கதாநாயகனாக வருண் நடிக்க, ஜெய்ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் ஸ்ரீநாத், ராகுல் தாத்தா, லொள்ளுசபா மனோகர்,  மொட்ட ராஜேந்திரன்,பப்லு (அறிமுகம்) ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜெய்கிரிஷ் இசை அமைக்கிறார். படத்திற்கு விஜயமோகன் ஒளிப்பதிவு செய்கிறார். காமெடி கலந்த காதல் கதையாக ஒரே நாளில் ஒரு பார்க்கில் நடக்கிற காதல் கூத்துக்கள் என இப்படத்தில் புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார் இயக்குனர்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பெங்களூர் லால்பார்க், செம்மொழிப் பூங்கா மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் 50% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

Comments