மிருகங்களின் குறும்புகளைக் காண குழந்தைகளை "தும்பா" திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்!

மிருகங்களின் பாதுகாப்பு குறித்து நாளைய தலைமுறையான குழந்தைகளுக்கு உரைக்கும் வகையில்  உருவாக்கபட்டது தும்பாதிரைப்படம்.KJR ஸ்டியோஸ் தயாரிக்கும் தும்பா திரைப்படத்தில் 'கனா' தர்ஷன், 'கலக்க போவது யாரு' தீனா மற்றும் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  அதோடு நடிகர் ஜெயம் ரவி  சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
 
ஹரிஸ் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தும்பா, கடந்த ஜூன் 21ம்தேதி திரைக்கு வந்து குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மிருகங்களின் குறும்புகளுடன் கூடிய நகைச்சுவை மிக அருமையாக அமைக்கபட்டுள்ளது.மிருகங்களின் சேட்டைகளைக் தங்கள் குழந்தைகள் காண வேண்டும் என்ற நோக்கில் பெற்றோர் அதிக அளவில் அவர்களின் குழந்தைகளை இந்த திரைப்படத்தைக் காண அழைத்து வருகின்றனர் என்றால் அது மிகையல்ல! இந்த படத்திலிருந்து சினிக் பிக் தற்போது வெளியாகியுள்ளது.

Comments