மணிரத்னம் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய்?

'செக்க சிவந்த வானம்' திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் தனது கனவுத் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் காரணமாக முன்னர் கைவிடப்பட்ட இந்த திரைப்படம் தற்போது மீண்டும் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாபச்சன், மோகன்பாபு, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ்  உள்ளிட்டோர்  தேர்வாகியுள்ளனர்.
 
இதில் முக்கிய வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும். சம்பள பிரச்னை காரணமாக மணிரத்தினத்தின் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துள்ளதாகவும். அந்த கதாபாத்திரத்தில் நடிக்கத்தான்  ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

Comments