விசுவாசம் படத்தை தொடர்ந்து அஜித்குமார் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் வித்யாபாலன், ஸ்ரதா ஸ்ரீநாத், பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் படத்தை தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்றை இயக்கிய எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தின¢ படப்பிடிப்பு நிறைவு கட்ட பணிகள் நிறைவு பெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது, இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள வானில் இருள் என்ற வீடியோ பாடல் வரிகளுடன¢ இன்று வெளியாகிறது. இதனால¢அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Comments
Post a Comment