இந்த வருட தொடக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்றொரு படத்தில் நடிக்க இருப்பதாக இருந்தது. இந்த படம் குறித்த அறிவிப்பு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால், சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டியிருந்ததால் லண்டன் சென்றிருந்தார்.
பின்னர், ஒருசில மாதங்கள் அங்கிருந்துவிட்டு உடல் எடையை குறைத்து சென்னைக்கு திரும்பினார். சிம்பு இங்கு வந்தவுடனேயே ஷூட்டிங் தொடங்கிவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால், சிம்பு ஹன்சிகாவின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக சென்றுவிட்டார். அதை முடித்துவிட்டவுடன் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் இந்த மாதம் 26ஆம் தேதி மலேசியாவில் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் சிம்பு ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட மாநாடு படத்திற்கு சிம்பு டிமிக்கி கொடுத்துவிட்டார் என்றுதான் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருந்தாலும் மாநாடு படக்குழு சிம்பு மீதுள்ள அயராத நம்பிக்கையில் மேலும் படம் குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர். இந்நிலையில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் பிக்பாஸ் புகழ் டேனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மலையாள இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷனின் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment