30 வருடங்களாக செய்யாததை நாங்கள் 3.5 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம்’ என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் நாசர் தலைமையில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் நேற்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து நடிகர் விஷால், ‘சரத்குமாரை விமர்சித்து வீடியோ வெளியிடவில்லை. நாங்கள் செய்ததை சொல்லவே வீடியோ வெளியிட்டோம். ரஜினியை விரைவில் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளோம். ஒவ்வொருவருக்கும் கருத்துரிமை இருக்கிறது. நடிகர் சங்க தேர்தலின்போது கமல் மற்றும் ரஜினியை சந்திப்பது உற்சாகம் அளிக்கக்கூடியது.

கடந்த முறை கமல்ஹாசனை சந்தித்து கூறிய விஷயங்களை நிறைவேற்றி இருக்கிறோம். சொன்னதையும் செய்தோம். சொல்லாததையும் செய்தோம். 30 வருடங்களாக செய்யாததை நாங்கள் 3.5 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம்’ என்று விஷால் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment