சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகிறது நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் மூலம் வித்யா பாலன் தமிழில் அறிமுகமாகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்திருந்த மாம் திரைப்படம் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.
இந்தியப் படங்களுக்கு சீனாவில் வரவேற்பு உருவாகியுள்ள சூழலில் படத்தைக் கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டனர். 38,500 திரைகளில் திரையிடப்பட்ட அந்த திரைப்படம் தற்போது 100 கோடி ரூபாயைக் கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ள நிலையில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் படத்தை சீனாவில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மூன்று மாதங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்து பரபரப்பாக இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Comments
Post a Comment