நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பில் முறையீடு!

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் ஏற்கனவே அறிவித்த 23ம் தேதியே நடத்த உத்தரவிட வேண்டும் என நீதிபதி ஆதிகேசவலுவிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விஷால் தொடுத்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

Comments