நியூயார்க்கில் ஓய்வெடுத்து வரும் அலியாபட்!

ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் நாயகியாக நடிக்கிறார் பாலிவுட் நடிகை அலியா பட். ஹிந்தியில் தற்போது தான் நடித்து வரும் பிரமாஸ்த்திரா படத்தில் நடித்த பிறகு அடுத்த மாதம் முதல் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ள கால்சீட கொடுத்திருந்தார்.
 
ஆனால், பிரமாஸ்த்திரா படத்திற்காக அவர் வாரணாசியில் நடித்து வந்தபோது திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து சிகிச்சை எடுத்துக்கொண்ட அலியாபட், தற்போது நியூயார்க் சென்று ஓய்வெடுத்து வருகிறார்.

அவரை ஒரு மாதத்திற்கும் மேலாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதால் அடுத்த மாதம் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பில் அலியாபட் கலந்து கொள்ளமாட்டார் என்று கூறப்படுகிறது.

Comments