விஜய் சேதுபதி, அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தம் !

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கான படப்பிடிப்பு நேற்று (ஜூன் 10-ம் தேதி) பூஜையுடன் தொடங்கியது. 
மேற்சொன்ன மூன்று படங்களும் கிராமப்புற பின்னணியில் தயாராகியுள்ள நிலையில் இந்தப் படமும் அத்தகைய பின்புலத்தில் உருவாகவுள்ளது.இந்தத் திரைப்படத்திற்கு க/பெ.ரணசிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல் வரிகளை வைரமுத்து எழுத, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Comments