காதலித்தவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்: நடிகை ரிச்சா!

ரிச்சா கங்கோபாத்யா பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் ஒஸ்தி மற்றும் மயக்கம் என்ன எனும் தமிழ் சினிமாவின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இந்நிலையில் இவர் வெளிநாட்டை சேர்ந்த ஜோ லிக்கலோ என்பவரை காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வெளி உலகிற்கு தெரிவித்தார். இதையடுத்து ரிச்சாவிற்கு ஜோவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் நடிகை ரிச்சாவிரைவில் காதலனை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments