இசைஞானி இசையமைக்க பூஜையுடன் துவங்கிய நடிகர் ஆதியின் ‘கிளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்!

ஈரம்', மிருகம், மரகதநாணயம் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஆதி. இவர் தற்போது பிரித்வி ஆதித்யா இயக்கும் 'கிளாப்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தை பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய , ராகுல் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தை ஐ.பி.கார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படம் அத்லெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்க விழா  நேற்று நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, ஹீரோ ஆதி உள்ளிட்டோர் கலந்து கொண்டர். இந்த படத்தை பிரபல ஹீரோ நானி கிளாப் அடித்து துவங்கிவைத்தார்.

Comments