தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சென்னை கமலா திரையரங்கில் இன்று காலை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த இயக்குநர் பாரதிராஜா சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விஷால் அணிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்துக்க் தலைவராக பாரதிராஜாவை நிறுத்துவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இப்போது அவர் இயக்குனர்கள் சங்கத்துக்கு அவர் தலைமைப் பொறுப்பேற்றுள்ளதால் மொத்த திரையுலகையும் அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன
Comments
Post a Comment