தமிழ் சினிமா ரசிகர்களிடையே தளபதி என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய்.இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் வெளியானது.
இந்த புகைப்படம் வெளியாகிய 1 நிமிடத்தில் பெரும் சாதனையை படைத்துள்ளது.சமூக வலைதளங்களில் அனைவராலும் கவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அப்பா விஜய் பட்டா கத்தியுடனும், மகன் விஜய் கால்பந்து வீரர் லுக்கிலும் தோன்றினர். இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியான இரண்டாவது லுக் போஸ்டரில் 4 வித்தியாசமான கெட்டப்பில் விஜய் காட்சியளிக்கிறார். விஜய்யின் ஜெர்சி நம்பர்.5 என்றும், அவரது பெயர் மைக்கேல் என்றும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு விஜய் கையில் கால்பந்துடன் சிரித்துக் கொண்டும், மற்றொரு விஜய் இறுக்கமான முகத்துடன் கையில் பட்டா கத்தி, நெற்றியில் குங்குமம், கழுத்தில் சிலுவையுடன் நிற்கிறார். பின் புறம் உள்ள விஜய்யின் ஜெர்சி நம்பர்.5ம், அவரது பெயர் மைக்கேல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக அவரது கையில் சைக்கில் செயினும், லுங்கியும் அணிந்திருக்கிறார். மற்றொரு விஜய் கையில் கிட்டுடன் கோட் சூட் அணிந்து கார்பரேட் லுக்கில் இருக்கிறார்.

Comments
Post a Comment