பாக்யராஜ் அணியினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்!

நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். இரு அணிகளுமே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர். 
நடிகர் சங்க கட்டிட திறப்பு விழாவிற்கு தன்னை அழையுங்கள் என கமல் கூறினார் என கமலிடம் ஆதரவு கேட்ட பிறகு பாக்யராஜ் பேட்டி அளித்தார். மேலும் எங்கள் அணியின் தேர்தல் அறிக்கையை கமலிடம் காண்பித்து ஆதரவு கேட்டோம். 
 
தேர்தல் அறிக்கை விவரம் வருமாறு:-

* எந்தவித நிதி திரட்டலும் இல்லாமல் 6 மாத காலத்தில், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும்.

* டோக்கன் முறை முழுமையாக ரத்து செய்யப்படும், மூத்த கலைஞர்கள் நலம்பெற முதியோர் இல்லம் திட்டம்.

* உறுப்பினர்களுக்கான சேமநல நிதியை நடிகர் சங்கமே செலுத்தும்.

உள்ளிட்ட பல திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

Comments