தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படமான தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர் என்கிற படத்தில் 'நடித்துள்ளார். கென் ஸ்காட் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் பிரான்ஸ் நாட்டில் திரையிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது மேலும் கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தை இத்திரைப்படம் ஈர்த்தது.
தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி நகைச்சுவை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 'பக்கிரி' என்கிற பெயரில் தமிழில் இன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் பக்கிரி படத்தின் முதல் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரைலரில் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில் தந்தையை தேடி அயல் நாட்டிற்கு செல்லும் நாயகன், தமிழ் அகதியாக அங்கு சந்திக்கும் பிரச்னைகளை கொண்ட காட்சிகள் இதில் இடம் பிடித்துள்ளது.
Comments
Post a Comment