விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் கடந்த மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலைகாரன்' திரைப்படம் வரும் 7ஆம் தேதி வெளியாகவிருப்பதாக படக்குழுவினர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.
சஸ்பென்ஸ் மற்றும் த்ரில் படமான 'கொலைகாரன்' படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷ்மிகாவும், போலீஸ் அதிகாரியாக ஆக்சன் கிங் அர்ஜூன் அவர்களும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சீதா, சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சைமன் கிங் இசையில் முகேஷ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.
Comments
Post a Comment