நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.
இந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி, நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தொடர் ஹெரோஸ்ஸை உருவாக்கிய டிம் கிரிங் என்பவரால் எழுதப்பட்டதாகும். இத்தொடரில் ஜெரிமி ஐர்வின், பிரயன் ஸிமித் ஒமார் மெட்வாலி மற்றும் டிரேஸி இபிஈயகார்ரும் நடிக்கின்றனர்.
Comments
Post a Comment