சினிமாவில் வதந்திகள் இல்லாமல் ஒரு நாளும் ஓடாது. காதல் வதந்தி, கல்யாண வதந்தி, குழந்தை வதந்தி, பிரிவு வதந்தி, விவகாரத்து வதந்தி, மோதல் வதந்தி என வதந்திகள் பல வகைப்படும். சில வதந்திகள் மட்டும் உண்மையாக மாறும். அதில் காதல் வதந்திகளுக்குத்தான் முதலிடம்.
ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டாலே அடுத்த சில மாதங்களில் அந்த நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்து விடுவார்கள். அவருக்கு உண்மையிலேயே குழந்தை பிறக்கும் வரை இம்மாதிரியான வதந்திகள் வந்து போய்க் கொண்டேயிருக்கும். இப்படித்தான் கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா, கர்ப்பமாக இருக்கிறார் என ஒரு செய்தி தெலுங்கு ஊடகங்களில் பரவி வந்தது. அது சமந்தாவை எட்டாமல் போனால்தான் ஆச்சரியம்.
அதற்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் சமந்தா . “நான் கர்ப்பமாக இருக்கிறேன் என நீங்கள் கண்டுபிடிக்கும் போது எனக்கும் அதைச் சொல்லுங்கள்,” என டுவிட்டரில் சொல்லியிருக்கிறார்.
Comments
Post a Comment