தமிழ் சினிமாவில் 'ஆடுகளம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. அதன்பின் ‘வந்தான் வென்றான்,’ ‘ஆரம்பம்,’ ‘காஞ்சனா 2,’ ஆகிய தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு டாப்ஸி தமிழில் நடித்துள்ள 'கேம் ஓவர்' படம் நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது.
இந்த படத்திற்கான முன்னோட்ட நிகழ்வு ஒன்றில் பேசிய டாப்ஸி அவருக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்த தகவலை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். “என்னுடைய போராட்டம் என்று சொன்னால் அது மும்பையில் வீட்டுக்காக நடத்திய போராட்டம்தான். நடிகையான எனக்கு ஒரு அபார்ட்மென்ட் கூட வாடகைக்கு கிடைக்கவில்லை. அவர்கள் நாங்கள் செய்யும் வேலையை எந்த விதத்திலும் நம்பவில்லை” என்றார்.
Comments
Post a Comment