முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பாலிவுட் நடிகை மவுனி ராய்?

தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் மவுனி ராய். இவர், இந்தத் தொடரில் பாம்பு உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்தவர். இந்தத் தொடர் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, அவர் பாலிவுட்டில் நடிக்க முயன்றார்; அவருக்கு வாய்ப்புகளும் வரிசை கட்டின.

ரன்வீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட நடிகர், நடிகையர் நடித்திருக்கும் பிரம்மாஸ்திரா படத்தில், முக்கியான கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார் மவுனி ராய். அந்தப் படம் வெளியானதும், இன்னும் பரபரப்பாக மவுனி ராய் பேசப்படுவார் என்கின்றனர் இந்தி பட உலகினர்.

இந்நிலையில், தற்போது இந்தி படமான பாரத் படத்தின் ப்ரீமியர் ஷோ, மும்பையில் நடந்தது. அதற்கு, மவுனி ராய் வந்திருந்தார். அவர், விதவிதமாக போஸ் கொடுத்து, போட்டோ ஷூட்டிலும் கலந்து கொண்டார். அந்தப் போட்டோக்கள், தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

அந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், மவுனி ராய், தன்னுடைய முகத்தை மாற்றி இருக்கிறார். அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார் என கூறத் துவங்கி உள்ளனர். முன்பு இருந்த அவரது முகம், தற்போது மாறி இருப்பதோடு, பழைய பொழிவும்; அழகும் முகத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Comments