சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ஷ புதிய தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த படத்தின் வசன காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாதம் மூன்றாம் வாரத்துடன் முடிவடையவுள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள இயக்குனர் முருகதாஸ், ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் வரை நடைபெறும் என கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக படக்குழுவினர் சுவிட்சர்லாந்து செல்லவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 2020-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த ‘தர்பார்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இளம் இசைப்புயல் அனிருத் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Comments