பண்ணையாரும் பத்மினியும்,’ ‘சேதுபதி’ படங்களை தொடர்ந் து அருண்குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் படம் ‘சிந்துபாத்.’இத்திரைப்படத்தில், லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி நடிகர் விஜய்சேதுபதி கூறியதாவது:–
சிந்துபாத்’ படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதைதான். கடல் கடந்து வந்த ஒருவன் மனைவியை தூக்கி கொண்டு போய்விடுவான். மனைவியை எப்படி கதாநாயகன் மீட்கிறான் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதையாகும். இந்த கதையில் கணவன், மனைவி உணர்ச்சி வசப்பட்ட காட்சிகள் அழகாக இருக்கும். இந்த படத்தின் இரண்டாம் பாதி முழுவதுமே கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் காட்சிகள்தான்.
இந்த படத்தில் கதாநாயகனுக்கு சரியாக காது கேட்காது என்பதால் நாயகி சத்தமாக பேச வேண்டிய கதாபாத்திரமாகும். அஞ்சலி சாதாரணமாகவே கத்தி பேசுவார் என்பதால் அவரை தவிர இந்த கதாபாத்திரத்திற்கு எவரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள்’’ என கூறினார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் விவேக் வரிகளில் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் இம்மாதம் 21ம் தேதி ரிலீசாகவுள்ளது.
Comments
Post a Comment