2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தின கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் வழங்குகிறது.அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களி
லும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. தற்போது பெரிய திரையில் அதன் லைவ் ஆக்ஷன் பதிப்பை பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.தமிழ் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் டிஸ்னி இந்தியா, தமிழ் பதிப்புக்கு வசனங்கள் மற்றும் பாடல்களை எழுத பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கியை ஒப்பந்தம் செய்துள்ளது. பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக துவங்கிய அவரது பயணத்தின் முதல் தசாப்தத்தில், நவீன இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களான எந்திரன், கோ, துப்பாக்கி, கத்தி, பாஜிராவ் மஸ்தானி, பாகுபலி படங்கள், நடிகையர் திலகம், பத்மாவத் மற்றும் 2.0 போன்ற படங்களின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார்.
நான் டிஸ்னியின் கிளாசிக் திரைப்படங்களை பார்த்து ரசித்தவன். அவர்களின் கதை சொல்லல் ஈடு இணையற்றது. லயன் கிங் அனைத்து தலைமுறைகளுக்கும் பிடிக்கும் ஒரு கதை. இந்த கதையை நம் உள்ளூர் ரசிகர்களுக்கு ஏற்றவாறு எழுதுவது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. கதையின் அசல் சிந்தனை மற்றும் சுவையை தக்க வைப்பதற்காக நான் தொடர்ந்து முயற்சி செய்தேன். ஆனாலும் ரசிகர்கள் தங்கள் விருப்பமான மொழியில் அதைப் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக சில வேடிக்கையான உள்ளூர் விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன்” என்றார் மதன் கார்க்கி.
அயர்ன் மேன்’ மற்றும் ‘தி ஜங்கிள் புக்’ புகழ் இயக்குனர் ஜான் ஃபேவரூ இயக்கத்தில் உருவாகியுள்ள, டிஸ்னியின் ‘தி லயன் கிங்’ சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். ஒரு ஹீரோ உருவாகும் பயணம் தான் இந்த மியூசிக்கல் ட்ராமா படத்தை பெரிய அளவில், முன்னோடியான, மிகச்சிறந்த ஃபோட்டோ ரியல் அனிமேஷன் தொழில்நுட்பத்துடன் மீண்டும் பெரிய திரையில் உயிர் பெற்று வர காரணமாக அமைந்திருக்கிறது.
டிஸ்னியின் ‘தி லயன் கிங்’ ஜூலை 19, 2019 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.
Comments
Post a Comment