ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 167வது திரைப்படமான "தர்பார்" பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தர்பார் படத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் கசிந்த வண்ணம் தான் உள்ளது.
ஏற்கனவே ரஜினி காந்த் மற்றும் நயன்தாராவு இணைந்து நடித்த காட்சிகளின் புகைபடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் தற்போது போலீஸ் வாகனத்தில் ரஜினி பயணிப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் கசிந்துள்ளது.
Comments
Post a Comment