விஜய் சேதுபதியின் 33-வது படம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, வெங்க கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க உள்ளதாகவும், தடயற தாக்க, தடம் படங்களின் இயக்குநர் மகிழ்திருமேணி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் அமலாபாலுக்கு பதிலாக இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியது. ஊட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment