கெட்டப்பை மாற்றிய அங்காடித் தெரு மகேஷ்!

அங்காடித்தெரு படத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகர் மகேஷ் தற்போது கருப்பு ஆடு படத்தில் புதிய தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக தனது உடல் எடையை ஏற்றி தோற்றத்தை மாற்றி இருக்கிறார்.படம் பற்றி இயக்குனர் விஜய் மோகன் கூறியதாவது:- அங்காடித்தெரு
மகேஷ் அதிகம் எதிர்பார்க்கும் படம் இது. நாயகி அக்ஷதாவும் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதில் நடித்துள்ளார்.
 
மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறேன். சமூகவிழிப்புணர்வு கதையாக இது இருக்கும். சைக்கிளில் தெருத்தெருவாக சென்று ஐஸ் விற்கும் கதாபாத்திரத்தில் மகேஷ் நடிக்கிறார். நாயகன் நாயகி காதலுக்கு மையமாக ஒரு ஆடு இருக்கிறது.அதனால்தான் கருப்பு ஆடு என்ற தலைப்பு வைத்தோம். மாரிமுத்து, தவசி, பால்ராஜ், திண்டுக்கல் தனம் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
ரொனால்ட் ரீகன் இசை அமைக்க, அருண் பாரதி பாடல்களை எழுதியிருக்கிறார். படத்தொகுப்பை சி.எஸ் பிரேம் கவனிக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல் முருகன் வாழ்வின் யதார்த்தத்தை அருமையாக படமாக்கி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments