வைரமுத்து மீ டூ விவகாரம்! பாண்டே மீது பாடகி சின்மயி பகீர் புகார்!

பாலியல் விவகாரத்தில் ரங்கராஜ் பாண்டே மீது பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து மீது, பாடகி சின்மயி பாலியல் புகார் எழுப்பியதும், இதன்பேரில் #MeToo என்ற பெயரில் எழுந்த சர்ச்சைகளும் தமிழகம் அறிந்த விசயமாகும். இந்நிலையில், வைரமுத்துவின் தமிழாற்று படை என்ற வீடியோவை ரங்கராஜ் பாண்டே வெளியிடுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், இதற்கு பாடகி சின்மயி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதன்படி, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''பாண்டே போன்ற பத்திரிகையாளர்கள், வைரமுத்து பற்றி எந்த கேள்வியுமே கேட்காமல் ஜால்ரா தட்டி வருகிறார்கள், இதுதான் ஆண்களின் பொதுவான மனநிலை. தவறு செய்பவர்களை யாரும் கேட்டுக் கொள்ள மாட்டார்கள்.
 
பெண்களை சாகடித்துவிட்டு, பாலியல் குற்றவாளிகளை கொண்டாடுகிறார்கள். நல்ல தமிழ் பண்பாடு, '' என்று குறிப்பிட்டுள்ளார். சின்மயி கூறியுள்ள கருத்தால், தமிழக ஊடக உலகில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ரங்கராஜ் பாண்டே அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments