ஜீவாவின் 29-வது படம் 'கொரில்லா'. இதில்
ஜீவாவுக்கு ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே
நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில்
வருகிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள
இந்தப் படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார்.
ஏற்கனவே, கொரில்லா படத்திலிருந்து சென்னை
கானா பாணியில் 'சோ மிட்டாய்' பாடல் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல
வரவேற்பைப் பெற்ற நிலையில், புதிய தகவலாக கொரில்லா படத்தின் சாட்டிலைட்
உரிமத்தை பிரபல தனியார் சேனலான ஜீ தமிழ் விலைக்கு வாங்கியுள்ளது.
Comments
Post a Comment